!
வரமேதும்
கேளாத தவம் நின் காதல்
என்றும்
முன் தோன்றி
வரம் தராததென் காதல்
நீ
தவம் களையவில்லை
என்னில்
காதல்
தோன்றவில்லை
தெய்வங்கள் என்னை
தேவதையில்லையென்ற போது
சக்திகள் யாவும்
இழந்து நிற்கதியாய்
நான்
நின்ற போதும்
எனக்காக தவம் களையாமல்
நீ
உன்னிடம்
இதோ
வரம் வேண்டி நான்..!