Wednesday, 4 July 2012

வா இலக்கியமாகலாம்..

உன்னை
நிந்தித்தும்
என்னை நொந்துக்கொண்டும்
கால விரயமே...
இருப்பினும்
பசிக்க தவறவில்லை
வேஷம் இடுவதும் நின்றுவிடவில்லை
ஏதோ
ஒன்றுக்காக ஏதோ ஒன்றில்
செயல்பட்டாக வேண்டிய
கட்டாயத்தில்
நீ
நான்
அவர்கள்
இவர்கள்
அவை
இவை
கடந்து கொண்டிருக்கிறது
பொழுதுகள்
இப்போதெல்லாம்
எதற்கும் கலங்குவதில்லை விழிகள்
புத்தகமாக
எல்லா கட்டுகளும் பொருந்தியபடியால்
ஒரு
இலக்கியத்திற்கு நாயகியாய்
எல்லா தகுதிகளோடும்
நான்
ஏன்
நீ கூட என்னை
காவியமாக்கலாம்
உனக்கும் அதற்கு
எல்லா திறமைகளும் உண்டு
நேற்றைய
உண்மை இன்றைய சரித்தரம்
நீயும் நானும்
நாளைய இலக்கியமாய் மாறலாம்
உன்னால்
இயலாது என்றால் சொல்
வேறு
எவரையேனும்
நம்மை
எழுத சொல்லலாம்

2 comments:

  1. நீயும் நானும்
    நாளைய இலக்கியமாய் மாறலாம்
    உன்னால்
    இயலாது என்றால் சொல்
    வேறு
    எவரையேனும்
    நம்மை
    எழுத சொல்லலாம்
    அழகு அழகு வரிகள் அழகு.

    ReplyDelete
  2. நம்மை நாமே எழுதிவிடல் நல்லது.
    அல்லது காலம் அதை இலக்கியமாகச் செய்யலாம்.

    ReplyDelete